இந்திய சினிமா சரித்திரத்தில் ஆயிரம் கோடி கிளப்பில் ‘பாகுபலி 2’ இணையவுள்ளது.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் மிகப்பெரிய வெற்றி பெறும் படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூலித்து, ஆயிரம் கோடி கிளப்பில் இணையும். ஆண்டுக்கு நான்கைந்து ஹாலிவுட் படங்கள் மட்டுமே இந்த சாதனையை படைக்கும். ‘அவதார்’, ‘டைட்டானிக்’, ‘லார்ட் ஆஃப் ரிங்ஸ்’, ‘ஹாரி பார்ட்டர்’, ‘ஸ்பைடர் மேன்’, ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ மாதிரியான படங்கள் இத்தகைய சாதனையை படைத்துள்ளன.

அதிகம் படித்தவை:  தல57 படத்தில் நடிகை யார் - லிஸ்டில் மூன்று நடிகைகள் !

அந்த வரிசையில் இணையப்போகிறது ‘பாகுலி2’. காரணம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி வசூலை எட்டிவிட்டது. இந்திய அளவில் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் முதல் 3 நாளில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 60 கோடி வசூலித்துள்ளது. மற்ற நாடுகளின் வசூல் எல்லாம் சேர்த்தால் இதுவரை 520 கோடி வசூலித்திருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் கோடி கிளப்பில் இணையும் என்று திரைப்பட வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அதிகம் படித்தவை:  36 வயதினிலே! அழகுப்பதுமை அனுஷ்காவிற்கு பிறந்தநாள்

ஆயிரம் கோடி வசூலிக்கும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் பங்கு தொகை போக 600 கோடி தயாரிப்பாளருக்கு கிடைக்கும், படத்தின் பட்ஜெட் 300 கோடி போக மீதி 300 கோடி நிகரலாபமாக கிடைக்கும் என்கிறார்கள் சினிமா கணிப்பு நிபுணர்கள். இந்திய சினிமா சரித்திரத்தில் ஆயிரம் கோடி கிளப்பில் இணையப்போகும் முதல் படமாக ‘பாகுபலி 2’ அமைய இருக்கிறது.