பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் 1500 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆனாலும் கூட தியேட்டரில் மக்களின் கூட்டம் இன்னும் அலை மோதுகிறது.

படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் புகழ்ந்து வரும் நிலையில், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது வேறு எந்த படம் வெளியானாலும் அவ்வளவாக ஓடாது எனும் அளவிற்கு பாகுபலி தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம். இந்நிலையில் தமிழகத்தில் பாகுபலி 2 திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  பிரபல இயக்குனர் மகளுடன் மோகன்லால் மகன் எடுத்த செல்பி- வைரலாகும் புகைப்படம்

படம் வெளியான அன்றே இணையத்திலும் படம் வெளியானது. அதன்பின்னர் திருட்டு டிவிடி விற்ற நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் தமிழகத்தில் சில லோக்கல் சேனல்களில் பாகுபலி 2 திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக திருச்சி கிங் டிவி ஆபரேட்டர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அதன் உரிமையாளர் வாசிம் ராஜாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே திருட்டி டிவிடி, இணையத்தில் வெளியாவது ஆகியவை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் லோக்கல் சேனல்களில் படம் ஒளிபரப்புவதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.