பாகுபலி படத்தின் வெற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகின்றது.

பாகுபலி-2 ட்ரைலர் ரசிகர்களின் செம்ம வரவேற்பு பெற்றது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படத்தின் நடிகர்கள் பிஸியாகவுள்ளனர்.

தற்போது வந்த தகவலின்படி பாகுபலி-2 படத்தில் 90% ஒரு சின்ன அறைக்குள் எடுத்தது தானாம். அனைத்துமே கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதாம்.

இந்திய சினிமாவிலேயே 90% ஒரு சின்ன அறைக்குள் எடுத்தது இதுவே முதன் முறை என கூறப்படுகின்றது.