bahubali prabhasபிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகமான ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளாவில் முடிவடைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் அதனையடுத்து மின்னல் வேகத்தில் கிராபிக்ஸ் பணிகளை முடித்து வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் ‘பாகுபலி 2’ படத்தை வெளியிட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த நிலையில் இரண்டாவது பாதியை முழுக்க முழுக்க அனுஷ்கா ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இரண்டாவது பாதியில் சத்யராஜுக்கும் முக்கியத்துவம் இருப்பதாகவும், முதல் பாதியை போலவே இரண்டாவது பாதியிலும் அட்டகாசமான போர்க்காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.