சினிமாதுறையே தற்பொழுது முடங்கி கிடக்கிறது சினிமாவில் உள்ள பல பிரச்சனையை முன் வைத்து தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் நடத்திவருகிறார்கள் அதனால் படபிடிப்பு, போஸ்டர் புரடக்ஷன் பணிகள் என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது, இதைவிட தயாரிப்பாளர்களுக்கு பெரிய பிரச்சனை என்றால் பைரசி இணையதளம் தான்.

baahubali2

கடந்த வருடம் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக திரைக்கு வந்த படம்தான் பாகுபலி-2 இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தையே உருவாகியது, ஆம் வசூலில் முதல் இடத்தில் இருக்கிறது, ஆனால் பாகுபலி-2 படத்திற்கு ஒரு சோக செய்தியும் இருக்கிறது.

பைரசி இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்த படத்தின் லிஸ்டில் பாகுபலி படம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது, இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது சினிமா துறைக்கு.

இதைப்பற்றி ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது அந்த ஆய்வில் பைரசி இணையதளம் மூலம் அதிகமாக பதிவிறக்கம் செய்த படத்தில் முதலிடத்தில் பாகுபலி2 படத்தை இதுவரை 93 லட்சம் முறை டவுன்லோட் செய்துள்ளார்கள், வசூலில் தான் முதலிடம் என்றால் டவுன்லோட் செய்வதிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இரண்டாம் இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருகான் நடித்த ஹிந்தி படம்மான ரயீஸ் படத்தை 62 லட்சம் முறை டவுன்லோட் செய்துள்ளார்கள். மேலும் பாகுபலி-2 படத்தை 93 லட்சம் என்றாலும் அதை pendrive, cd, harddisk மூலம் ஷேர் செய்தவர்களின் எண்ணிக்கை இந்த லிஸ்டில் வராது இந்த படத்தை டவுன்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை 93 லட்சம் என்றால் சராசரியாக ஒரு டிக்கெட் விலை ரூ120 என்றாலும் மொத்தம் 11 கோடியே 16 லட்சம் வருகிறது.

இந்த படத்தை பைரசி இணையதளத்தின் மூலம் டவுன்லோட் செய்வதால் மொபைல் நெட்வொர்குக் நிறுவனத்திற்கும், இணையதள சேவை நிறுவனத்திற்கும் எவ்வளவு லாபம் பார்த்திருப்பார்கள்.