சென்னை: சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகியுள்ளது. கன்னடத்திலும் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளிநாடுகளிலும் இதே மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் தினசரி 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினசரி 6500 காட்சிகளும் திரையிடப் பட்டன.
போர்க்கள காட்சிகள் பிரமாண்டமாக படமாகப்பட்டுள்ள இந்தபடம், உணர்வுப் பூர்வ கதையம்சம் கொண்டுள்ளது. இதன் காரணமாக உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

பாகுபலி-2 படம் வெளியான 4 நாட்களில் ரூ.600 கோடி வசூல் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ.25 கோடி, தமிழகத்தில் ரூ10 கோடி, கர்நாட்காவில் ரூ.9 கோடி, கேரளாவில் ரூ.5 கோடி என வசூல் செய்து உள்ளது. 4 வது நாளில் தென்னிந்தியாவில் மட்டும் ரூ. 250 கோடியை வசூல் செய்து உள்ளது.

பாகுபலி-2 இந்தியில் ரூ.35 கோடி வசூல் செய்து உள்ளது. தவிர, வெளியான நான்கே நாட்களில் முதன்முறையாக மொத்தம் 600 கோடி ரூபாய்களை வசூல் செய்த முதல் படம் என்ற உலக சாதனை படைத்துள்ளது பாகுபலி-2 .