bahubali

சென்னை : பாகுபலி 2 திரைப்படம் சட்டவிரோதமாக பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பட்டது.

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தமிழகத்தில் கடந்த வாரம் பாகுபலி 2 திரைப்படம் வெளியானது . ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில், பட வெளியாகும் நாளன்றே காலை 9 மணி அளவில், சட்டவிரோதமாக இணையத்தில் பாகுபலி 2 படம் வெளியானது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகம் படித்தவை:  பாகுபலி-2 தமிழில் கிஸ் சீன் கட் .! ஏன் தெரியுமா?

அதற்கு முன்பாக படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, பாகுபலி 2 படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆனது . இந்தநிலையில் பாகுபலி 2 திரைப்படம் சட்டவிரோதமாக பேஸ்புக் பக்கம் ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பட்டது.

அதிகம் படித்தவை:  தப்பு தப்பு தப்பு: 'பாகுபலி 2' படத்தில் 5 தப்புகளை சுட்டிக்காட்டிய நயனின் விக்னேஷ் சிவன்

ஏற்கெனவே பாகுபலி 2 திரைப்படம் ஹெச்.டி தரத்தில் இணையதளத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டிருந்தது. இதனிடையே இன்று பாகுபலி 2 திரைப்படம் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு மணிநேரம் லைவ் ஸ்டீரிமீங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக லைவ் செய்யப்பட்டது.