fbpx
Connect with us

Cinemapettai

அழிவின் விளிம்பில் AGS.. ஓயாமல் சோதிக்கும் தல ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அழிவின் விளிம்பில் AGS.. ஓயாமல் சோதிக்கும் தல ரசிகர்கள்

ஏஜிஎஸ் நிறுவனம் அட்லீயை வைத்து தெரியாமல் படம் எடுத்து விட்டது. அதனால் அவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை. ஓயாமல் பிகில் தயாரிப்பாளரை தல அஜித் ரசிகர்கள் உசுப்பேத்தி கொண்டே இருக்கின்றனர் என்று புலம்புகிறார்கள். பிகில் படம் ஆரம்பத்தில் இருந்தே அதனுடைய ஹேஷ் டேக்களை ட்விட்டரில் ட்ரென்ட் ஆகுதோ இல்லையோ அந்தப் படத்தின் தயாரிப்பாளரை கலாயித்து நிறைய ட்ரென்ட் ஆகிவிட்டது. இப்பொழுது மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது.

உண்மையாகவே பிகில் படம் லாபம் வந்ததா என்று இப்பொழுது குழப்பமாகவே இருக்கிறது. ஏனென்றால் வெளிவரும் செய்திகள் அப்படி. ஆரம்பத்தில் பிகில் படத்தைப் பாராட்டி கரன் ஜோகர் ஒரு ட்வீட் செய்தார். ‘சிறப்பான கொண்டாட்டமான படமே பிகில். எமோஷன்களின் ரோலர் – கோஸ்டர் பயணம். வெற்றி மற்றும் புத்துணர்ச்சி மிகுதியாக இருந்தது. தளபதி விஜய் டாப் டக்கர், நம்மை விசில் அடிக்க வைத்துவிட்டார். அவர் சிறப்பு. அட்லீ இந்த ஆட்டத்தில் தான் ஒரு ஆசான் என நிரூபித்துவிட்டார். சூப்பர் ஸ்டாரான இயக்குனர்’. என்பதே ஸ்டேட்டஸ். உடனே படம் நன்றாக இருக்கும் என்று செய்தி பரவியது.

இப்படிலாம் சொல்லியும் இப்படி கிளப்பி விடுகிறார்களே என்று வேதனை வேறு. போதாத குறைக்கு தயாரிப்பாளர் ராஜன் கூறுகையில், அட்லி ஒரு குப்பை கதை கையில் வைத்துக்கொண்டு இஷ்டத்திற்கு செலவு செய்வதால் தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது என்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரிடம் நீங்கள் அட்லியை வைத்து படம் எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, அட்லி கிட்ட கதையே கேட்க மாட்டேன் என்று அசிங்கப்படுத்தி உள்ளார்.

இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி தயாரிப்பாளருக்கு லாபம் உண்மைதான் ஆனால் படம் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு தான் சிறிது நஷ்டம் என்று கூறுகிறார்கள். உண்மை என்னவென்று அந்த படத்தை வாங்கிய தியேட்டர் முதலாளிகள், விநியோகிஸ்தர்கள் கூறினால் தான் உண்டு. இந்நிலையில் இன்று #அழிவின்விளிம்பில்AGS என்ற ஹேஷ் டேக் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இது யார் செய்வா அஜித் ரசிகர்கள்தான் என்று ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர். பிகில் விஸ்வாசம் வசூல் சாதனையை முறியடித்து என்று வேறு செய்திகள் வந்தது அந்த கோவம் போல.

பதிலுக்கு விஜய் ரசிகர்கள் மூலம் இன்னொரு ஹேஷ் உருவாக வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் நம்முடைய சண்டை நடந்தால் பரவாயில்லை ஆனால் இந்திய முழுவதும் செல்வதால் தமிழ் சினிமாவுக்குத்தான் அசிங்கம் என்று சில நியாயஸ்தர்கள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு சில ரசிக கூட்டம் ‘எங்களிடம் கோடிகளில் பணம் இருக்கோ இல்லையோ, நோ ப்ரோப்ளம். இந்த சின்ன சந்தோசங்கள் போதும்னு சொல்கிறார்கள்’.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top