Politics | அரசியல்
அழகிரி மனைவியின் பக்கா ப்ளான்! மிரண்ட திமுக
ஸ்டாலின்-அழகிரி சண்டையில் திமுகவினரை விட மற்ற கட்சியினர் சந்தோஷமாக இருக்கிறார்கள். கலைஞரின் இரங்கல் பேரணிக்காக அழகிரி நடத்திய கூட்டம் ஓரளவு வந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக அழகிரி என்ன செய்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது ஏற்கனவே கலைஞர் சமாதியில் திமுக உடையும் என பரபரப்பான ஒரு பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அழகிரி ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திமுகவினருக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்திருக்கிறது. மேலும் இடைத்தேர்தலில் திமுக திருமங்கலம் திருவாரூர் தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறாது அதே நேரத்தில் அவர்கள் நான்காம் இடத்தை தன பிடிக்கும் என கூறியுள்ளார்.இது திமுகவிற்கு மேலும் கோபத்தை வரவழைக்கிறது.
ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட தினகரன் இன்று அரசியலில் பெரும் புரட்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று அழகிரியின் மனைவி காந்தி அறிவுரை சொல்லி இருக்கிறார். அதனால் திருவாரூர் தொகுதியில் சுயேட்சையாக நின்று மக்களிடம் ஓட்டு கேட்டு வெற்றி பெறுவோம் என்று அவரது மனைவி காந்தி கூறியிருக்கிறார் இதனால் திமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
