Connect with us
Cinemapettai

Cinemapettai

ayyappanum-koshiyum-remake-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்.. கொல மாஸ் கூட்டணி!

சமீபகாலமாக மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்.

பிரித்திவிராஜ், பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த அந்த படம் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. இந்நிலையில் அந்த படத்தின் தமிழ் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார்.

நீண்ட நாட்களாக அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய செய்திகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்க இருந்த நிலையில், பின்னர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கடைசியாக சிம்பு மற்றும் சரத்குமார் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சிம்புவும் உடல் எடையை குறைத்து செம பிட் ஆக மாறி உள்ளதால் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கூறுகின்றனர்.

ayyappanum-koshiyum-remake

ayyappanum-koshiyum-remake

தொடர்ந்து பல படங்களில் நடித்தவரும் சிம்புவுக்கு அய்யப்பனும் கோஷியும் படம் அவரது மார்க்கெட் உயரக் காரணமாக அமையும் என்கிறார்கள். ரசிகர்கள் அய்யப்பனும் கோஷியும் ரீமேக் படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை கமெண்டுகளில் பதிவுசெய்யலாம்.

Continue Reading
To Top