Connect with us

Cinemapettai

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய கூட்டணி!

ayyappanum-koshiyum-remake-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய கூட்டணி!

மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்திவிராஜ், பிஜூ மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்.

தற்போது அய்யப்பனும் கோஷியும் படத்திற்கு மற்ற மொழிகளிலும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. மற்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் அய்யப்பனும் கோஷிம் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழில் இன்னும் நடிகர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கில் இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு முடிந்து விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம். இந்த அறிவிப்பை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

pawankalyan-rana-cinemapettai

pawankalyan-rana-cinemapettai

மேலும் அய்யப்பனும் கோஷிம் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் பாகுபலி ராணா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சாய் பல்லவியும், ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளனர்.

saipallavi-aishwarya rajesh-cinemapettai

saipallavi-aishwarya rajesh-cinemapettai

தெலுங்குக்கு ஏற்றவாறு கொஞ்சம் மசாலா கதையாக மாற்றி அதிரடி படமாக உருவாக உள்ளதாம். அடுத்த மாதம் இதற்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழுக்கு பின்னர் ரீமேக் ரைட்ஸை வாங்கிய தெலுங்கு படக்குழு நடிகர், நடிகைகளை தேர்வு செய்து படப்பிடிப்புக்கு விரைவில் செல்லும் நிலையில் இன்னும் தமிழ் சினிமாவில் சரியான நடிகர் நடிகைகள் தேர்வு செய்யாமல் தடுமாறி வருகிறது தமிழ் படக்குழு.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top