மும்பை: கல்லூரியில் படித்த காலத்தில் காசுக்காக ரயிலில் பாட்டு பாடியதாக பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

விந்தணு தானம் குறித்து வலியுறுத்திய விக்கி டோனார் படம் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. அவர் பரினீத்தி சோப்ராவுடன் சேர்ந்து மேரி பியாரி பிந்து படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் வரும் ஏ ஜவானி தேரி பாடல் வெளியீடு மும்பையில் நடந்தது. அப்போது ஆயுஷ்மான் கூறுகையில்,

நாடகம்

நான் கல்லூரியில் படித்த காலத்தில் லைவ் ஷோக்களில் கலந்து கொண்டுள்ளேன். மேலும் மேடை நாடகங்கள் மற்றும் தெருக்கூத்துகளிலும் பங்கேற்றுள்ளேன்.
பெண்கள்

தியேட்டர், நாடகம் என்று பிசியாக இருந்துவிட்டதால் பெண்கள் பின்னால் சுற்ற நேரம் இல்லை. கல்லூரி நாட்களில் ரயிலில் பாட்டு பாடி பணம் சம்பாதித்த அனுபவத்தை சொல்ல விரும்புகிறேன்.
ரயில்
ரயில்

அப்போது டெல்லியில் இருந்து மும்பை சென்ற பஷ்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நானும், என் நண்பர்களும் ஒவ்வொரு பெட்டியாக சென்று பாடி, நடித்தோம். அதை பார்த்துவிட்டு பயணிகள் எங்களுக்கு பணம் கொடுத்தார்கள்.
கோவா
கோவா

ரயிலில் பாடி, நடித்து நிறைய சம்பாதித்தோம். அந்த பணத்தை வைத்து நாங்கள் கோவாவுக்கு சுற்றுலா சென்றோம். ரயில் பாடகன் என்று நீங்கள் என்னை அழைக்கலாம் என்றார் ஆயுஷ்மான்.