Connect with us

Cinemapettai

ayohiya

Politics | அரசியல்

அயோத்தி வழக்கு தீர்ப்பும்.. அரசியல் தலைவர்களின் பரபரப்பான கருத்தும்

அரசியலுக்கு அப்பாற்பட்டு மதரீதியான இந்த அயோத்தி பிரச்சினை இன்று முடிவுக்கு வந்துள்ளது.  வழக்கில் ஐந்து நீதிபதிகள் ஒரே தீர்ப்பு வழங்குகிறோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார், அதன்படி 1045 பக்கங்களின் முக்கியமான விவரங்களை படிப்பதற்கு அரை மணி நேரம் ஆகும் என்று தெரிவித்தனர்.

பல வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கு இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இருந்ததற்கான அடையாளம்  இதுவரை நிரூபிக்கப் படவில்லை என்பதே இதற்கான காரணம். இந்த வழக்கின் தீர்ப்பை பற்றி இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் கூறியிருக்கும் கருத்தை தற்போது பார்க்கலாம்.

நீண்ட நாளாக நீடித்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு அளித்துள்ளது, அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுள்ளது. இந்தியாவின் சகிப்புத் தன்மையை உணர்த்துகிறது, இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதே நவம்பர் மாதம் 9-ம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது, அதேபோல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நவம்பர் 9-ம் தேதியும் வரலாற்றில் நினைவு கூறப்படும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை நடைமுறைப்படுத்த இஸ்லாமியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் கருத்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் மக்களும் அதை மதித்து வரவேற்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் இன்று ஆரத்தி எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை, 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு தேவையில்லை என்று முஸ்லீம் தலைவர் தெரிவித்துள்ளார். தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை, உரிமை போராட்டம் தொடரும் என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Janu_Bhaskar_/status/1193080699537907713?s=20

https://twitter.com/Krishna57896846/status/1193096508448464897?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top