நான்கு வருடமாக கிடப்பில் கிடக்கும் ஜிவி பிரகாஷ் படம்.. ஒரு வழியா விடிவு காலம் வந்தாச்சு!

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறி சில வெற்றிப் படங்களையும் பல தோல்விப் படங்களையும் கொடுத்த நடிகர் தான் ஜிவி பிரகாஷ். இவர் நடித்த அடல்ட் படங்களை தவிர மற்ற படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்தது.

ஆனால் கடைசியாக ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் ஜிவி பிரகாஷின் நடிப்பில் முதிர்ச்சி தெரிவதாக விமர்சனங்கள் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

அதில் ஒன்றுதான் சீனுராமசாமி படம். அதேபோல் ஜிவி பிரகாஷ் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று ஐங்கரன். ஈட்டி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது.

ஆனால் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி இந்த படம் கடந்த நான்கு வருடங்களாக பெட்டிக்குள் முடங்கியது. இனிமேலும் வருமா? வராதா? என்ற சந்தேகத்தில்தான் படக்குழுவினர் இருந்துள்ளனர். ஜிவி பிரகாஷ் கூட இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்தாராம்.

தற்போது ஒரு வழியாக ஐங்கரன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் சோனி லீவ் என்ற நேரடி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம். சமீப காலமாக கிடப்பில் கிடக்கும் படங்களுக்கு வரப்பிரசாதமாக சோனி லீவ் என்ற OTT வந்திருக்கிறது என பல தயாரிப்பாளர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

இதனால் விரைவில் இந்த படத்திற்கான மொத்த வியாபாரத்தை முடித்துவிட்டு படத்தின் விளம்பரங்களை வெகு விரைவில் படக்குழு தொடங்கவுள்ளது. ஐங்கரன் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

ayngaran-cinemapettai
ayngaran-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்