இந்த 2016ஆம் ஆண்டில் 8 படங்களை கையில் வைத்துக்கொண்டு ‘கெத்தா’க சுத்திக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ‘நானும் ரௌடிதான்’ படத்தின் க்ளைமேக்ஸில் ‘யூனிஃபார்ம்ல என்னை பார்த்தேனு வச்சுக்கோ… அப்டியிருப்பேன்!’ என நயன்தாராவிடம் டயலாக் பேசினார் விஜய்சேதுபதி. இதோ இப்போது… ‘சேதுபதி’ படத்தில் முறுக்கு மீசை, போலீஸ் யூனிஃபார்ம் என அசத்திக் கொண்டிருக்கிறார். ‘பண்ணயாரும் பத்மினியும்’ அருண்குமார் இயக்கும் இப்படத்தை ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஏற்கெனவே, ‘நானும் ரௌடிதான்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிட்ட ஐங்கரன், அப்படம் மூலம் நல்ல லாபம் சம்பாதித்திருப்பதால் விஜய்சேதுபதியின் இப்படத்தையும் ஆர்வமாக வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.