சூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?
2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அயன், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார் ஏவிஎம் சார்பாக எம். சரவணன், எம். எஸ். குகன் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியீடு செய்தது.

அயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் கல்லா கட்டியது , ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் நீண்ட காலங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் கதை முதலில் விஷாலுக்கு தான் எழுதப்பட்டது, இயக்குனர் கே.வி.ஆனந்த் முதலில் விஷாலிடம் தான் கதையை சொன்னார் ஆனால் விஷால் பிறகு பார்க்கலாம் என்றதால் கதையில் சில சில மாற்றங்களை செய்து சூர்யாவின் நடிக்க வைத்து வெற்றி கண்டார்.
மேலும் தற்பொழுது சூர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார் ,இதற்குமுன் இவர்களின் கூட்டணியில் அயன் மாற்றம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

