செலவோட செலவா அயலானுக்கு வந்த அடுத்த ஆப்பு.. பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் தரிசனம் கஷ்டம் தான்

Ayalaan – Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் எந்தவித பரபரப்புகளும் இல்லாமல் கடந்த ஆறு வருடங்களாக உருவாகி இருந்தாலும், சமீபத்தில் வெளியான டீசர் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதை என்பதால் தான். மேலும் இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் ஏலியனை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறார்.

இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என தெரிந்து விட்டது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு காம்போவில் நகைச்சுவை காட்சிகளும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. மேலும் படத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டையும் இது தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகிறது என அவருடைய ரசிகர்களும், அயலான் படத்திற்காக குழந்தைகளும் காத்திருக்கும் நேரத்தில் இப்போது இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அயலான் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக இருப்பது ஏலியன். எனவே இந்த ஏலியன் வரும் காட்சிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் எல்லாம் இருக்கும் காட்சிகளை 3D தொழில்நுட்பத்தில் மாற்றி விடலாம் என தயாரிப்பாளர் முடிவு எடுத்து இருக்கிறார். படம் நன்றாக வந்திருப்பதால் கண்டிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் இன்னும் ரசிக்கும்படி இருக்கும் என்பதுதான் அவருடைய எண்ணம்.

ஏற்கனவே படம் கொடுத்த பட்ஜெட்டை தாண்டி விட்டது. எனவே செலவோடு செலவாக இதையும் செய்துவிடலாம் என படக் குழு திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் இதில் தான் மிகப்பெரிய சிக்கலே இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் காபி ரெடியானதும் தான் இந்த முடிவை தயாரிப்பாளர் எடுத்திருக்கிறார். இப்போது இதில் 3D தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும்.

இப்போது வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த காட்சிகளை 3D ஆக மாற்றுவதற்கு கண்டிப்பாக மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் கால அவகாசம் எடுக்கும். தயாரிப்பாளரும் படத்தை 3D தொழில் நுட்பமாக மாற்ற வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார். இதனால் பொங்கல் நாளன்று சிவகார்த்திகேயனின் தரிசனம் கொஞ்சம் கஷ்டம் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்