பிரபல தெலுங்கு நடிகர் நானி தன் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரிக்கும் இரண்டாவது படம் ஆவ் ( AWE ).

regina cassandra

புதுமுக இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கியுள்ள இப்படத்தில் ரெஜினா காசான்ட்ரா, நித்யா மேனன், காஜல் அகர்வால், ஸ்ரீநிவாஸ், , ஈஷா, முரளி ஷர்மா, ரோகினி, தேவதர்ஷினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

Nithya-Menen source: apherald

மார்க்.கே.ராபின் இசை. கார்த்திக் ஒளிப்பதிவு . எடிட்டராக கெளதம் பணியாற்றியுள்ளார்கள். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் கதையை மீன் மற்றும் போன்சாய் மரம் வாயிலாக சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் வரும் மீனுக்கு நானியும், மரத்திற்கு ரவி தேஜாவும் குரல் கொடுத்துள்ளனர்.

nani- ravi teja

இப்படத்தின் ட்ரைலரை நாணி தன் ட்விட்டரில் வெளியிட்டார். இப்படம் வரும் பிப்ரவரி 16 தெலுங்கில் ரிலீசாகிறது. தமிழில் டப்பிங் செய்யப்படுமா இல்லையா போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.