நாச்சியார் பட ரிலீஸ் ஆன பொழுது கூடவே ரிலீஸ் ஆன படம் தான் இந்த AWE . என்னடா ரிலீஸ் ஆகி ஒரு வாரம் முடிந்த பின்பும் இப்படம் ஹவுஸ் புல் ஆக ஓடுதே. சரி ஒரு விசிட் போவோம்னு சென்றால் உலகத்தரத்தில் ஒரு இந்திய படம் என்று தான் சொல்லவேண்டும்.

ஆவ்

சில பல மாதங்களாகவே தெலுங்கு சினிமாவில் பலரும் பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட படம். முன்னணி நடிகரான நானி, உடை வடிவமைப்பாளர் பிரசாந்தி டிபிரமேனியுடன் இணைந்து தயாரித்த படம். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளி வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

awe flp

படக்குழு

புதுமுக இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கியுள்ள இப்படத்தில் ரெஜினா காசான்ட்ரா, நித்யா மேனன், காஜல் அகர்வால், ஸ்ரீநிவாஸ்,ரோகினி , ஈஷா, முரளி ஷர்மா, ரோகினி, ப்ரியதர்ஷி புலிகொண்டா, தேவதர்ஷினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மார்க்.கே.ராபின் இசை. கார்த்திக் கட்டமான ஒளிப்பதிவு . எடிட்டராக கெளதம் பணியாற்றியுள்ளார்கள்.

இதுமட்டுமன்றி படத்தில் வரும் மீனுக்கு நானியும், போன்சாய் மரத்திற்கு ரவி தேஜாவும் குரல் கொடுத்துள்ளனர்.

nani- ravi teja

படக்கதை

தன் பிறந்த நாளன்று தற்கொலைக்கு முயலும் காஜல் அகர்வால். ஓரின சேர்க்கையாளராக இருக்கும் நித்ய மேனன் , ஈஷா ஜோடி. டைம் மெஷின் கண்டுபிடிக்க ஆசைப்படும் ஸ்ரீனிவாசா. வேலைதேடும் ப்ரியதர்ஷி. போதைக்கு அடிமையான சர்வர் ரெஜினா. மேஜிக்மேன் முரளி . மோக்ஷய என்ற குட்டி பெண் . இந்த கதாபாத்திரங்களின் பெயர்கள், அவர்கள் நோக்கம், என்ன வித மூடில் இருக்கிறார்கள் என நாம் புரிந்துகொள்ளும் பொழுது ட்விஸ்டுடன் வைத்து இடைவேளை. ட்விஸ்ட் என்ன வென்றால் இந்த அணைத்து கதாபாத்திரங்களும் இருப்பது ஒரே ஹோட்டலில்.

AWE

இடைவெளிக்கு பின் இந்த தனி தனி கதாபாத்திரங்கள் எவ்வாறு ஒரே கோட்டில் சந்திக்கிறது. அதன் பின் நிகழும் மீதி கதை தான் கிளைமாக்ஸ் .( இதற்கு மேல் கதையா பற்றி நாம் சொல்ல நேர்ந்தால் படத்தின் சுவாரசியம் போய் விடும் என்பதால் அதை இங்கு சொல்லவில்லை )

இயக்குனர் பிரஷாந்த் வர்மா

முதலில் என்ஜினீயர், பின்னர் தனது ஆசையால் சினிமா கற்றவாறாம். குறும் படங்கள், விளம்பரப்படங்கள் எடுத்துள்ளார். பல முறை, பல தயாரிப்பு நிறுவனகளுக்கு கதை சொல்லியும் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் போராடியவர்.

prasanth-varma-awe

இப்படத்தில் பல சோசியல் மெசஜை புகுத்தியுள்ளார். ஓரின சேர்க்கை, குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு, ஆண் மற்றும் பெண் பாலின பிரச்சனை, தற்கொலை எண்ணம், மன நோய் என்று பல விஷயங்களை அசாத்தியமாக கை ஆண்டுள்ளார்.

இப்படம் பல ஜானர்களின் கலவை என்று தான் சொல்ல வேண்டும். வழக்கமான மாசல தெலுங்கு படம் என்று நினைத்து செல்பவர்களுக்கு ஏமாற்றமே வரும். புதிய முயற்சியை ஆதரிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

regina cassandra

பிளஸ்

கதாபாத்திர தேர்வு, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு

மைனஸ்

அனைத்து தரப்பினருக்கும் புரியாத ஸ்டைல் மேக்கிங், சப் டைட்டில் கிடையாது

சினிமாபேட்டை ரேட்டிங் 3.75/5

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

தெலுங்கு சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே புதிய முயற்சி இப்படம். எனினும் படத்தின் மேக்கிங் ஸ்டைலில் அகிரா குரோஷா பார்க்க முடிகிறது. திரைக்கதை அமைப்பதில் கிறிஸ்டோபர் நோலன் பாணி உள்ளது. படத்தின் கதை மனோஜ் ஷ்யாமளான் அவர்களின் “ஸ்ப்ளிட்” [SPLIT ] படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது .

split
SPLIT

கிறிஸ்டோபர் நோலன் , மனோஜ் ஷ்யாமளான், அகிரா குரோஷா போன்றவர்களின் படங்களை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி எடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆகமொத்தத்தில் மலையாள, தமிழ் சினிமாவை போல தெலுங்கு சினிமாவும் அடுத்த லெவெலுக்கு சென்று விட்டதற்கு இப்படம் உதாரணம்.