Surya and Karthiபாண்டியராஜ் இயக்கி இருந்த பசங்க 2 படத்தை தயாரித்து குழந்தைகளுக்கான நலனை பற்றி கூறியிருந்தார் சூர்யா. குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதை அழகாக பதிவு செய்திருந்தார்.

தற்போது கார்த்தி தன்னுடைய பேஸ்புக் மூலம் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். அதில், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வகுப்பில் சேர்ப்பதாக இருந்தால், குழந்தைகள் உங்களின் நேரடிக் கண்காணிப்பபில் இருந்தால் மட்டுமே அனுப்பவும். இல்லையென்றால் சிசிடிவி கேமராக்கள் அந்த அறையில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் தீர ஆராய்ந்த பிறகு சேர்க்கவும்.

அதிகம் படித்தவை:  விஜய்,ரஜினியை தொடர்ந்து விஜய் ஆண்டனி

இதுபோன்ற வகுப்புகளில் நடைபெறும் சிகிச்சைகளால் பல குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் கேட்கிறேன். தயவுசெய்து, குழந்தைகளின் மீதான உங்களின் கண்காணிப்பை விலக்கிவிடாதீர்கள். இத்தகவலை சூர்யாவும் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தனது வாழ்க்கையை புகைப்படம் மூலம் வெளிபடுத்திய தொகுப்பாளினி மணிமேகலை.!

Karthi