News | செய்திகள்
மீண்டும் விருதுகளை அள்ளிய என்னை அறிந்தால்
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதிலும் குறிப்பாக அருண் விஜய்யின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விருது விழாவில் அருண் விஜய் சிறந்த வில்லன், சிறந்த நடன அமைப்பாளர் ‘அதாரு அதாரு’ பாடலுக்காக சதீஷ் ஆகியோர் இப்படத்திற்காக விருது வென்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னையின் பிரபல கல்லூரியில் நடந்த விருது விழா ஒன்றிலும் மீண்டும் அருண் விஜய், சதீஷ் விருதுகளை வென்றனர்.
மேலும், சிறந்த நடிகர் ஜெயம் ரவி, சிறந்த நகைச்சுவையாளர் RJ பாலாஜி, ஸ்டைலிஷ் ஆக்டர் அதர்வா ஆகியோர் வென்றனர்.
