fbpx
Connect with us

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் – திரை விமர்சனம் !

Hollywood / ஹாலிவுட்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் – திரை விமர்சனம் !

மார்வெல் ஸ்டூடியோ

மார்வெல் ஸ்டுடியோஸிற்கென்று தனி வெறியர் கூட்டமே உலகெங்கும் உள்ளது. அவர்கள் உருவாக்கிய  பல சூப்பர் ஹீரோக்கள் இணைந்து கலக்கும்  படம் தான் அவென்ஜ்ர்ஸ் சீரிஸ். இதற்கு முன் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அவெஞ்சர் படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 27 உலகெங்கும் வெளியானது.

பிரமாண்ட காட்சிகள் பிரமிப்பூட்டும் தொழில்நுட்பம் என இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Avengers

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்

அவெஞ்சர்ஸ் பட வரிசையில் மூன்றாவது, மற்றும் (MCU ) மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் 19 வது படம் தான் இது. சுமார் 22 சூப்பர் ஹீரோக்கள் ஒற்றை வில்லனை எதிர்கொள்வது தான் படத்தின் மையக்கரு. மேலும் இதன் கடைசி பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவருகின்றது.

படத்தின் கதை

இன்பினிட்டி கற்கள் – பிக் பாங் வாயிலாக ஏற்படும் மாற்றத்தில் வெவேறு சக்தி உடைய 6 கற்கள் உருவாகிறது. அந்த 6 அதியசயக் கற்களும் யூனிவெர்சில்  6 வெவ்வேறு இடங்களில் ஒரு பாதுகாவலரிடம் கொடுத்து  வைக்கப்பட்டுள்ளது.  அதன் சக்திகள் ஸ்பேஸ், மைண்ட், ரியாலிட்டி, சக்தி, டயம் மற்றும் ஆன்மா.

Avengers – THANOS

தனோஸ் – இவனின் நோக்கம் இந்த 6 கற்களை தன்வசம் கையகப்படுத்தி, அதன் திறன் கொண்டு யூனிவெர்செய் கட்டுப்படுத்தி அழிவை கொண்டுவருவதே இவன் நோக்கம்.

1 vs 22 – தனோஸ் மற்றும் அவனின் தத்து பிள்ளைகள், படைகள் அந்த கற்களை தனோஸ் அடையமுடியாதபடி தடுக்க வேண்டும் என்பதே சூழல். சூப்பர்  ஹீரோக்களுக்கும், தனோசுக்கும் இடையே நடக்கும் மெகா யுத்தமே  படம் . ஆகமொத்தத்தில் ஒற்றை ஆளான தானோஸை மொத்தமாக 22 சூப்பர் ஹீரோக்கள் இணைத்து எவ்வாறு போராடுகின்றனர். இறுதியில்  ஜெயித்தது யார் என்பது தான் படத்தின் கதை.

Avengers

சினிமா பேட்டை அலசல்

ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்களை அனைவரையும் படத்தில் பயன் படுத்தி அசத்தி உள்ளனர் இயக்குனர்கள்  ரூஸ்ஸோ  பிரதர்ஸ். 149 நிமிடங்கள் அதகளம் பண்ணிவிட்டனர் டெக்கினிக்கல் டீம். கிராபிக்ஸ், இசை, சண்டை காட்சிகள், வசனம் அனைத்துமே டாப் க்ளாஸ். ஆகமொத்தத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டாட்டம் தான். பல வாரங்களுக்கு பாக்ஸ் ஆபிசில் டாப்பில் இருக்கப்போகும் படம் இது.

சினிமாபேட்டை வெர்டிக்கிட் 4 / 5

சினிமாபேட்டை கமெண்ட்ஸ் :

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ பிரம்மாண்டத்தின் தொடக்கம் தான், அடுத்த ஆண்டு இப்படத்தின் அடுத்தப்பாக்கத்தில் தான் பிரம்மாண்டம் முடிவுக்கு வரும். அதுவரை இன்ஃபினிட்டி எண்ணங்கள் மற்றும் கற்பனைகளுடன் காத்திருப்போம். இடையிடேயே மற்ற சூப்பர் ஹீரோக்களின் படங்களுடன் நம் நேரத்தை செலவு செய்வோம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Hollywood / ஹாலிவுட்

Advertisement

Trending

To Top