2 மணி நேரத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய அவெஞ்சர்ஸ் End Game.! கோலிவுட் சினிமாவே ஆச்சரியம்.!

தமிழ் ரசிகர்கள் தமிழ் படங்களை மட்டும் விரும்பி பார்ப்பதில்லை அனைத்து மொழி படங்களையும் விரும்பி பார்க்கிறார்கள் அதில் ஹாலிவுட் படத்திற்காக தனி வரவேற்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்தநிலையில் அவெஞ்சர்ஸ் End Game படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, இதன் முதல் மூன்று பாகங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் இமாலய சாதனை படைத்தது அனைவருக்கும் தெரிந்தது.

இந்த நிலையில் அவேஞ்சர்ஸ் End Game படத்திற்கு ஏ ஆர் முருகதாஸ் வசனம் எழுதி உள்ளதும் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து உள்ளதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது, மேலும் படத்தின் முன்பதிவு சமீபத்தில் தொடங்கியது தொடங்கிய வேகத்தில் மூன்று நாளுக்கான முன்பதிவு டிக்கெட்கள் விற்றுத் தீர்த்தது.

இதுபோல் தமிழில் பெரிய நடிகர்கள் படம் தான் இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது ஆனால் தற்போது ஹாலிவுட் படமான அவேஞ்சர்ஸ் End Game இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

Leave a Comment