அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் – திரை விமர்சனம் !

Avengers End Game: மார்வலின் அவெஞ்சர்ஸ் பட வரிசையில் நான்காவது பார்ட். சென்ற பார்ட்டின் முடிவில் எண்ணற்ற குழப்பம் மற்றும் நம் கற்பனையை தூண்டும் விதத்தில் முடிந்தது.

பல துருப்புகள், எண்ணற்ற லாஜிக்குகள் என ரசிகர்கள் பல இடங்களில் பலவாறு அலசி வந்தனர். ஒரு புறம் ஆன்ட் மேன், மறுபுறம் கேப்டன் மார்வெல், டைம் ட்ராவல் என ரசிகர்கள் சொன்னதோ பல பல லாஜிக்.  எதிர்பார்ப்பு மிக அதிகம், அதனை பூர்த்தி செய்யவே அதீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இந்த டீமுக்கு நெறயவே இருந்தது.

கதை

விட்ட இடத்தில் இருந்து துவங்குகிறது கதை. ஒரே சொடுக்கில் பாதி உலகம் அழிய மீதி இருப்பவர்களின் பரிதாப நிலையுடன் ஆரம்பம் ஆகிறது படம். சூப்பர் ஹீரோக்கள் இணைந்து தானோசை தேட, ஒரே பொட்டில் அவன் தலை துண்டாக சிதற நமக்கு ஒரு வித குழப்பமே வருகிறது.

புது லாஜிக்குடன் ஆன்ட் மேனின் ரீ என்ட்ரி, அதனை சாத்தியமாகும் ஐயன் மேன், ஹல்க் என விறுவிறுப்பாகிறது படம். குழுவாக முந்தையகாலத்தில் சென்று அந்த கற்களை எடுத்து வர திட்டமிடுகின்றனர்.

இவர்களின் திட்டத்தை தானோஸ் எப்படி தெரிந்துகொள்கிறான். கடந்த காலத்தில் இருந்து எவ்வாறு நிகழ்காலத்திற்கு வருகிறான். மறைந்த சூப்பர் ஹீரோக்கள் வந்தனாரா, யுத்தம் என்ன ஆனது என சூடு பிடிக்கிறது படம்.

கிளைமாக்சில் மொத்த டீமும் இறங்குவது, அதகள சண்டை, எமோஷன்களின் உச்சம் செல்கிறது போர்க்களம்.

சினிமாபேட்டை அலசல்

இதை விட ஒரு கலக்கல் எண்டிங் கொடுக்கவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ரசிகர்களின் பல்ஸ் புரிந்து படத்தை எடுத்துள்ளனர். நிறுத்தி நிதானமாக திரைக்கதையை கொண்டு சென்றது தான் பிளஸ். பின் வழக்கம் போல வசனம், இசை, கிராபிக்ஸ் அணைத்துமே டாப் க்ளாஸ் தான்.

சினிமாபேட்டை ரேட்டிங் 4.25 / 5

Leave a Comment