fbpx
Connect with us

Cinemapettai

முதல் முறையாக பிரபல நடிகரின் படத்தில் வேலை செய்யும் அவதார் படக்குழு.. வேற லெவல் கெத்து காட்டும் நடிகர்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக பிரபல நடிகரின் படத்தில் வேலை செய்யும் அவதார் படக்குழு.. வேற லெவல் கெத்து காட்டும் நடிகர்!

ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகவும் சொற்பமான இந்திய படங்களில் மட்டுமே வேலை செய்துள்ளனர்.

ஆனால் ஹாலிவுட் சினிமாயையே அதிரவைக்கும் நிறுவனங்களான மார்வெல் மற்றும் டிசி போன்ற நிறுவனத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்ற படங்களில் அதிகம் வேலை செய்ய மாட்டார்கள்.

அதேபோல் அவதார் படத்தில் வேலை செய்த எந்த ஒரு டெக்னீஷியன்களும் இதுவரை எந்த ஒரு இந்திய படத்திலும் பணியாற்ற ஆர்வம் காட்டாத நிலையில் தற்போது ஒரு பிரபல நடிகரின் படத்திற்கு ஓகே சொல்லியுள்ளார்களாம்.

இந்திய சினிமாவில் மட்டும் அல்லாமல் உலக சினிமாவே அறியும் நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படங்களின் வெற்றியின் மூலம் உச்சத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் 500 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படம் உருவாக உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதாம்.

இந்த படத்தில்தான் அவதார் பட குழுவினர் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளதாம்.

Continue Reading
To Top