Tamil Cinema News | சினிமா செய்திகள்
அவதார் பார்ட் 2, 3, 4. 5 வரை ரிலீஸ் தேதி வெளியானது ..
டைட்டானிக் படப்புகழ் இயக்குனர் ஜேம்ஸ் காமெரூனின் பிரம்மாண்ட படைப்பே அவதார். அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை இப்படத்தின் வசம் தான் உள்ளது . சுமார் 2.7 பில்லியன் டாலர்.
ஜேம்ஸ் கேமரூன் 3 டி கண்ணாடியின்றி 3 டி படம் பார்க்க முடியும் என அறிவித்தார். இது திரையுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பல பிரச்சனைகள் சந்தித்து, இது வரை பல ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருந்தது. சென்ற அப்டேட் படி 2020ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அவதார் 2 தற்போது ஒருவருடம் தள்ளிப்போகிறது. 2021 டிசம்பர் 17ம் தேதி இரண்டாம் பாகம் வெளிவரும்.
Now scheduled to land on Pandora December 17, 2021 pic.twitter.com/d21QmCwiHC
— Avatar (@officialavatar) May 7, 2019
ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி வாங்கியதன் காரணத்தால், டிஸ்னி தயாரிப்பில் உருவாகி வரும் மற்றுமொரு மிகப்பரிய பொருட்செலவில் உருவான ஸ்டார் வார்ஸ் ரிலீஸை முன்னிட்டு அவதார் 2ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்கின்றனர்.
அனைத்து பாகங்களில் ரிலீஸ் தேதியும் இதோ.. அவதார் 2 – 17 டிசம்பர் 2021. அவதார் 3 – 22 டிசம்பர் 2023. அவதார் 4 – 19 டிசம்பர் 2025. அவதார் 5 – 18 டிசம்பர் 2027
