கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்து உலகிலேயே அதிக வசூலை செய்த திரைப்படம்தாங்க அவதார். 3டி தொழில் நுட்பத்தில் அதீத கிராபிக்ஸ்சில் வெளிவந்த இந்த படம் உலகம் முழுதும் பெருவெற்றி கண்டது…

இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கப்போவதாக படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெ‌ரிவித்திருந்தார்.

தொழில் நுட்பம் மூலமாக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் இயக்குனரின் பாணி இந்த இரண்டாம் பாகத்தில் மிக அதிகமாக இருக்குமாம்.

அதிகம் படித்தவை:  விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

அதற்காக ஜேம்ஸ் கேமரூன் 3டி கண்ணாடி அணியாமலேயே படத்தை 3டியில் பார்க்கும் ஒரு சிறப்பு டெக்னாலஜியை இந்த படத்தில் அறிமுகப்படுத்தவுள்ளாராம்.


பல வருட உழைப்பை கொட்டி எடுக்கப்பட்ட முதல்பாகம் உலகளவில் சுமார் பதினைந்தாயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, அச்சாதனையை முறியடிக்கும் விதமாக இரண்டாம் பாகத்தில் உலகத்தில் இதுவரை வெளிவராத அனைத்து தொழில் நுட்பத்தையும் பயன்படுத்த உள்ளாராம் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  இதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.

படம் 2020க்குள் வெளிவரும் என்று சொல்கிறார்கள்.

avatar 2 release dateசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கேமரூன் உங்களுக்கு போட்டியா எங்க தல பேரரசு ஒரு படம் எடுத்துட்டு இருகாரு தெரியுமா? பாப்போம் யாரு ஜெய்க்க போறதுன்னு….