fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரம்மாண்டத்தின் புதிய உச்சம்.. உலக சினிமாவை மிரளவைத்த அவதார் 2 ட்ரைலர்

avatar-2

Videos | வீடியோக்கள்

பிரம்மாண்டத்தின் புதிய உச்சம்.. உலக சினிமாவை மிரளவைத்த அவதார் 2 ட்ரைலர்

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அவத்தார் என்ற திரைப்படம் வெளியானது. இப்போதெல்லாம் பல புதிய தொழில்நுட்பங்கள் பெருகி விட்டது. ஆனால் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற தொழில்நுட்பங்கள் அந்த அளவிற்கு கிடையாது.

அப்படிப்பட்ட காலத்திலேயே அனைவரும் அசந்து போகும் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக வெளியானது அவதார் படம். நம் கற்பனைக்கு எட்டாத நீல நிற மனிதர்கள், அவர்களின் வாழ்வியல் போன்ற பல விஷயங்களை கொண்டு வெளியான அந்தத் திரைப்படம் பில்லியன் கணக்கில் வசூல் சாதனை படைத்தது.

நம் இந்திய ரூபாயை கணக்கிட்டுப் பார்த்தால் எத்தனை ஜீரோ என்று கூட சொல்ல முடியாது. அப்படிப்பட்ட பிரம்மாண்டத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. அதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

எனவே முதல் பாகத்தின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் இருக்கும் பல ரசிகர்களும் இந்த ட்ரைலரை பார்த்து அசந்து போய் இருக்கின்றனர். அதை பார்த்த பிறகு முழு படத்தையும் காணும் ஆவல் அவர்களுக்கு அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் வரை எங்களால் காத்திருக்க முடியாது என்று பல ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

மேலும் ட்ரெய்லரில் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் எதையும் காட்டப்படவில்லை. அவை அனைத்தையும் இயக்குநர் சஸ்பென்ஸாகவே வைத்துள்ளார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டு இருக்கும் விஷுவல் காட்சிகளும், பின்னணி இசையும் ரசிகர்களின் கைதட்டலை பெற்றுள்ளது. அதிலும் ப்ளூ வேல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் 10 மடங்கு அல்ல நூறு மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top