Connect with us
Cinemapettai

Cinemapettai

Avengers-avatar-2

Hollywood | ஹாலிவுட்

3 வருட அவெஞ்சர்ஸ் ரெக்கார்டை சுக்குநூறாக்கிய அவதார்-2.. மொத்த வசூல் கேட்டாலே தல கிறுனு சுத்துது

ஹாலிவுட் நம்பர் ஒன் மூவியாக பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் ரெக்கார்டை சுக்குநூறாக்கியுள்ளது அவதார் 2.

ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்க்கும் பிரியர்களின் மத்தியில் மார்வெல் ஸ்டுடியோஸிற்கென்று தனி வெறியர் கூட்டமே உலகெங்கும் உள்ளது. அவர்கள் உருவாக்கிய பல சூப்பர் ஹீரோக்கள் இணைந்து கலக்கும் படம் தான் அவென்ஜ்ர்ஸ் சீரிஸ். இதற்கு முன் படத்தின் மூன்று பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அவெஞ்சர் படத்தின் நான்காம் பாகம் அவெஞ்சர்ஸ் என்ட்கேம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸை மிரட்டியது.

அது மட்டுமின்றி இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 200 மில்லியன் டாலரை குவித்த பெருமைக்குரிய படமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது அவெஞ்சர்ஸ் என்ட்கேம் செய்த சாதனைகளை அவதார் 2 சுக்குநூறாகியுள்ளது. அவெஞ்சர்ஸ் சீரிஸின் நான்காம் பாகமாக வெளியானது என்ட்கே படத்தில் அயன் மேன் இறந்துவிடுவார் என படத்தின் வெளியீட்டுக்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

Also Read: 13 வருடமாக காக்க வைத்து புதிய உலகிற்கு கூட்டிச் சென்ற அவதார் 2.. எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அதேபோல் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படம் 21000 கோடி உலகம் முழுவதும்  செய்த வசூலை, அவதார் 2 படத்தின் முறியடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வித்தியாசமான தொழில்நுட்பங்களை கொண்டு வெளியான அந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 13 வருடங்களாக ரசிகர்களை காக்க வைத்த இந்த அவதார் 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகி, திரையரங்கில் இன்று வரை ரசிகர் கூட்டம் அலைமோதுகின்றனர்.

Also Read: உலக அளவில் எதிர்பார்த்த அவதார் 2.. வாட்டர் அமுஸ்மெண்ட் பார்க் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

இதனால் இந்திய அளவில் ஆல் டைம் நம்பர் 1 ஹாலிவுட் திரைப்படமாக பார்க்கப்பட்ட அவென்ஜ்ர்ஸ் திரைப்படத்தை அவதார் 2 பின்னுக்குத் தள்ளி உள்ளது. அத்துடன் உலக அளவில் 1 பில்லியன் டாலரையும் அவதார் 2 அசால்டாக வாரி குவித்து இருக்கிறது.

இவ்வளவு நாள் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்ற அவென்ஜ்ர்ஸ் சீரிஸ்-க்கு தற்போது அவதார் 2 கடும் போட்டியாக மாறியது மட்டுமல்லாமல் அவென்ஜ்ர்ஸ் படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு அவதார் சவால் விட்டிருக்கிறது. இதனால் அவென்ஜ்ர்ஸ் படத்தின் ஐந்து மற்றும் ஆறாம் பாகங்கள் வரும் 2025 அல்லது 2026-ல் வெளியாக இருப்பதால் அந்தப் படத்திற்கு அவதார் 2 படத்தின் வசூல் பெரிய போட்டியாக நிற்கும்.

Also Read: பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் அவதார் 2.. பிரமிக்க வைத்த முதல் நாள் வசூல் ரிப்போர்

Continue Reading
To Top