Connect with us
Cinemapettai

Cinemapettai

உலகமே எதிர்பார்க்கும் அவதார் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. தெரிஞ்சுதான் சொல்றாங்களா?

avatar-2-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உலகமே எதிர்பார்க்கும் அவதார் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. தெரிஞ்சுதான் சொல்றாங்களா?

2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் அவதார்(Avatar). ஜேம்ஸ் கேமரூன் உலகத்தையே வேறு ஒரு உலகத்திற்குள் அழைத்துச் சென்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

11 வருடங்கள் ஆகியும் அவதார் படத்தின் வியப்புகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஸ்வீட் சேர்க்கும் விதமாக அவதார் 2 படத்தின் அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் அவதார் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தின் இரண்டு, மூன்று, நான்காம், ஐந்தாம் பாகங்களுக்கான ரிலீஸ் தேதியை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அந்த வகையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வருகிற 2020 டிசம்பர் மாதமே வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.

இந்த செய்தி அவதார் பிரியர்களை கொண்டாட வைத்துள்ளது. இப்போது நடக்கும் சூழ்நிலையில் இந்த தேதியில் படம் வெளியாவது சாத்தியமாகுமா எனவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தண்ணீருக்குள் செட் போட்டு அவதார்2 படத்தை எடுத்து வருகிறாராம் ஜேம்ஸ் கேமரூன். இவரது கற்பனை வளத்திற்கு அளவே இல்லை.

இரண்டாம் பாகமே இப்படி மிரட்டும் போது இன்னும் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் மூன்று, நான்கு, ஐந்தாம் பாகங்களுக்கான எதிர்பார்ப்புகளை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top