Connect with us

Videos | வீடியோக்கள்

புது ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை மிரளவிட்ட அவதார் 2.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கும் 3D மூவி

avatar-2-tralier

அசர வைக்கும் தொழில்நுட்பத்தால் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு பலனாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் அவதார் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

Also read: பிரம்மாண்ட உலகிற்கு கூட்டிச்செல்லும் அவதார்-2 ட்ரெய்லர்.. டிசம்பர்ல எந்த படமும் வெளிவராது போல!

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புது ட்ரெய்லர் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சில ட்ரெய்லர்கள் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இறுதியாக வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லரும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோ இதுவரை வெளியான ட்ரெய்லர்களை காட்டிலும் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை நாம் கற்பனைகளில் மட்டுமே பார்த்து, கேட்டு ரசித்த ஒரு புதிய உலகை அப்படியே நம் கண் முன்னே காட்டி இருக்கிறது இந்த புது ட்ரெய்லர்.

Also read: உலக அளவில் அதிக வசூல் படைத்த 5 ஹாலிவுட் படங்கள்.. 13 வருடங்களாக முதலிடத்தில் இருக்கும் அவதார்

கடலுக்கு அடியில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அந்த வகையில் குழந்தைகள் உட்பட அனைவரும் என்ஜாய் செய்து பார்க்கும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் முந்தைய பாகத்தை விட இந்த திரைப்படம் இன்னும் பல மடங்கு வசூலை வாரிக் குவிக்கும் என்று ரசிகர்கள் இப்போதே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top