Photos | புகைப்படங்கள்
அவதார் 2- அடுத்த லெவல் பிரம்மாண்டம்.. வைரலாகுது பர்ஸ்ட் லுக் போட்டோஸ்
டைட்டானிக் படப்புகழ் இயக்குனர் ஜேம்ஸ் காமெரூனின் பிரம்மாண்ட படைப்பே அவதார். அவதார் 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம். படத்தின் மேக்கிங் மற்றும் டீட்டைல் விஷயங்களை பற்றி அனைவருமே வியந்தனர். உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை இப்படத்தின் வசம் தான் இருந்தது. 10 வருடம் கழித்து தான் சமீபத்தில் அவெஞ்சர்ஸ் : எண்டு கேம் இப்படத்தின் சாதனையை முறியடித்தது.
ஜேம்ஸ் கேமரூன் 3 டி கண்ணாடியின்றி 3 டி படம் பார்க்க முடியும் என அறிவித்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் வேலை ஆரம்பித்த பின் பல பிரச்சனைகள் சந்தித்தது படக்குழு, ஆனால் ஒவ்வொரு முறையும் அதை தகர்த்து முன்னேறினார் நம் இயக்குனர். இதுவரை பல ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருந்தது. அவதார் 2 2021 டிசம்பர் 17ம் தேதி வெளிவரும். முந்தைய பார்ட்டில் நடித்தவர்கள் மட்டுமன்றி டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், வின் டீசல், மிட்சல் எயோ மற்றும் பலர் நடிக்கின்றனர்.
லாஸ் வெகாஸில் இப்படத்தின் கான்செப்ட் சொல்லும் நான்கு ரெண்டரிங் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

Avatar 2
இந்த பார்ட்டில் பாண் டோரா எப்படி, நாவிஷ், பான்ஷே என அசத்தலாக உள்ளது.

Avatar 2
படத்தின் எதிர்பார்ப்பும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது.

Avatar 2
அவதார் இரண்டாம் பாகம் ரிலீஸானதும் தொடர்ச்சியாக அவதார் 3 – 22 டிசம்பர் 2023. அவதார் 4 – 19 டிசம்பர் 2025. அவதார் 5 – 18 டிசம்பர் 2027 என்பது இவர்கள் திட்டம்.

Avatar 2
