Narendra Modi-Avani Modi

பிரபல நடிகை ஒருவர் ‘நான் பிரதமர் மோடியின் மகள்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நான் ராஜாவாக போகிறேன், ஸ்டிராபெரி போன்ற தமிழ் படங்களில் நடித்த அவானி மோடி தான் இப்படி செய்துள்ளார்.

“எனக்கும் மோடிக்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது. நான் தான் மோடியின் மகள். நான் மட்டுமில்லை குஜராத்தில் உள்ள அனைத்து பெண்களும் மோடியின் மகள்கள் தான்” என கூறியுள்ளார்.

வழக்கம் போல இதுவும் ஒரு விளம்பர யுக்தி என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். நடிகை அவானி மோடிக்கு முதல் தமிழ் திரைப்பட வாய்ப்பு கிடைத்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி அவரை கடிதம் மூலம் வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.