படுக்கைக்கு அழைத்த ஆஸ்திரேலிய வீரர்.. கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்த அவலம்

ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரர்கள் என்றால் எப்பொழுதுமே சர்ச்சைக்கு பெயர் போனவர்கள். ஏற்கனவே ஸ்டீபன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை பெற்றிருந்தனர்.

முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்சும் மது அதிகமாக அருந்திவிட்டு பயிற்சிக்கு வந்தார் என்னும் குற்றச்சாட்டு உள்ளது. இப்படி ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரர்கள் மீதும் பல சர்ச்சைகள் உள்ளன. இந்நிலையில் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்குள் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Ball-Tampering-Cinemapettai.jpg
Ball-Tampering-Cinemapettai.jpg

ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் டிம் பைன் தான் கேப்டனாக செயல்பட்டு வந்தார். பைன் 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் சங்கத்தில் பணிபுரிந்த பெண் ஒருவரை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த குற்றச்சாட்டு தற்போது மூன்று ஆண்டுகளுக்குப்பின் விசாரணை நடத்தப்பட்டு டிம் பைன் மீது குற்றம் இல்லை என முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து யாரும் எதிர்பாராதவிதமாக டிம் பைன் அவராக முன்வந்து கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து தான் செய்தது தவறு என்றும் அதற்காக ரசிகர்களிடமும், என் மனைவியிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் பத்திரிகையாளர்கள் முன் கேட்டுக்கொண்டார்.

Tim-Cinemapettai.jpg
Tim-Cinemapettai.jpg

தற்போது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் டிம் பைன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்றும் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளது

- Advertisement -spot_img

Trending News