Sports | விளையாட்டு
இந்திய பெண்கள் வலையில் விழும் கிரிக்கெட் பிரபலங்கள்.. காதலியை தொக்காக தூக்கிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்
ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டராக வலம் வரும் மேக்ஸ்வெல் தற்போது இந்திய பெண் மீது காதல் கொண்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
வினி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வருடங்களாக வினி மட்டும் மேக்ஸ்வெல் இடையிலான காதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

maxwell
இவர்கள் இடையிலான காதலை சமூகவலைத்தளங்களில் தவறுதலாக சித்தரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆஸ்திரேலிய வீரர் முதல் முறையாக இந்தியா பெண்ணை மணக்கிறார் என்றுதான் நமக்குத் தெரியும்.
ஆனால் இதற்கு முன்னரே பவுலர் Shaun Tait என்ற ஆஸ்திரேலிய வீரர் ஐ.பி.எல் பார்ட்டியில் சந்தித்த பெண்ணை 2014ஆம் ஆண்டு ஒரு வருடம் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

maxwell
இதேபோல் முன்னதாக சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீலங்காவை சேர்ந்த முத்தையா முரளிதரன் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
