Sports | விளையாட்டு
ஆஸ்திரேலியாவே கண்டு நடுங்கும் இந்தியா வீரர் யார் தெரியுமா.? முழு தொடரிலும் பங்கேற்பாரா?
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டியும் அதைத் தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு எதிரணியினரை அச்சுறுத்தி வருகின்றது. ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் மூன்று தொடர்களிலும் அந்த வீரர் ஒருவர் தான் அணியை அச்சுறுத்தும் வீரராக பார்க்கப்படுகிறார்.
ஆஸ்திரேலிய அணி பும்ராவின் பந்துவீச்சை கண்டு அஞ்சும் நிலையில் உள்ளது. அவரது துல்லிய யார்க்கர் பந்துவீச்சின் காரணமாக அவரது பந்துவீச்சை எளிதாக அடித்து ஆட முடியாமல் எதிரணிகள் திணறி வருகின்றன. இதற்காக ஆஸ்திரேலிய அணி அவருக்காக தனியாக திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது இந்திய அணியில் பும்ராவின் வரவுக்கு பின் நிலைமை மாறி விட்டது. பும்ராவுக்கு முன்பு இருந்தே அணியில் இருந்த இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் அவருடன் ஜோடி சேர்ந்து ஆதிக்கம் செலுத்தத் துவங்கி உள்ளனர்.
முதலில் நடக்கும் ஒருநாள் தொடரில் பும்ரா நிச்சயம் பங்கேற்பார். டெஸ்ட் தொடரில் அவர் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்பதால் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
எதுவா இருந்தாலும் ஆஸ்திரேலியா மண்ணில் பும்ரா தன் ஆதிக்கத்தை நிச்சயம் செயல்படுத்துவார். பும்ரா டி20 போட்டிகளிலும் பங்கேற்றால் ஆஸ்திரேலியாவுக்கு அது பெரும் பின்னடைவாக மாறும்.

jasprit-bumrah-cinemapettai
