Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

இந்திய அணியில் அவரை கண்டாலே எங்களுக்கு பிடிக்காது.! ஆஸ்திரேலிய கேப்டன் கூறியது யாரை தெரியுமா?

கிரிக்கெட் உலகில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்த அணி என்றால் அது ஆஸ்திரேலிய அணி தான். டெஸ்ட் போட்டி என்றால் ஆஸ்திரேலியா அணி, பல யுத்திகளை கையாண்டு வெற்றி பெறும் அணி என்று கூறலாம்.

எதிரணி பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறவைக்க, பந்து வீச்சாளர்கள் சீண்டுவது, வார்த்தைப் போரில் ஈடுபடுவது போன்றவற்றை வைத்து வீரர்களை சீண்டிக்கொண்டே இருப்பார்கள்.

கடந்த பல வருடங்களாக ஆஸ்திரேலியாவிற்கு எப்போதெல்லாம் இந்திய அணி செல்கிறதோ,அப்போதெல்லாம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சீண்டுவார்கள்.

ஆனால் அவர் அப்படியே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுவார். சதமடித்து ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்து விடுவார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின், தன்னைக் கவர்ந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர்.

கோலி மற்ற வீரர்கள் போல் அல்ல தன்னை சீண்டியவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் ஆக்ரோஷமான வீரர். ஒரு ரசிகராக அவரது ஆட்டத்தை காண எங்களுக்கு பிடிக்கும்.

ஆனால் எங்களுக்கு எதிராக அவர் அதிக ரன்கள் அடிக்கும் போது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரருக்கும் விராட் கோலி ரன் குவிக்கும் போது பிடிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார் டிம் பெய்ன்.

virat-kholi

virat-kholi

Continue Reading
To Top