Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆஸ்திரேலிய வலைப்பயிற்சியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக வீரர்கள்.. மொத்தமாக குழம்பிய கேப்டன்!

Rahane-Kholi-Pujara-cinemapettai.jpg

Sports | விளையாட்டு

ஆஸ்திரேலிய வலைப்பயிற்சியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக வீரர்கள்.. மொத்தமாக குழம்பிய கேப்டன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி வியாழன் அன்று தொடங்க உள்ளது இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணி கடந்த இரண்டு நாட்களாக வீரர்களுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி மேற்கொண்டு வரும் வலைப்பயிற்சியில் தமிழ் மொழி முக்கியமான இடம் பிடித்துள்ளது. பொதுவாக வலை பயிற்சியின் போது வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் பேசுவார்கள்.

ஆனால் இந்த முறை வலை பயிற்சியில் நடராஜன், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள். இவர்கள் மூவரும் தங்களுக்குள் உரையாடல்களை தமிழில் தான் பேசி வருகிறார்கள்.

மேலும் இந்திய அணியின் பீல்டிங் கோச் ஸ்ரீதர் என்னும் தமிழர் தான். இவரும் பெரும்பாலும் அவர்கள் மூவரிடமும் தமிழில் தான் எப்படி பவுலிங் செய்ய வேண்டும், பேட்டிங் பிடிக்க வேண்டும் என்று கலந்துரையாடுகிறார்.

ஸ்ரீதர் பீல்டிங் கோச் என்றாலும் இந்திய பவுலர்களுக்கும் இவர் அறிவுரை வழங்குவார். பொதுவாக ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவுரை வழங்கும் இவர் இப்போது தமிழிலும் பேசி வருகிறார்.

ஆகையால் நடராஜன், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் போன்றவர்களுக்கு தமிழில் அறிவுரை வழங்கப்படுகிறது. இதனால் இவர்கள் பந்தை எப்படி போட போகிறார்கள் என்று தெரியாமல் பேட்ஸ்மேன்கள் குழம்பி உள்ளனர்.

முக்கியமாக கோலி, புஜாரா, ரஹானேவிற்கு இவர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள். இதனால் கற்கும் ஆர்வமும் பெருகி வருகிறது.

Nataraj-Sundar-Cinemapettai.jpg

Nataraj-Sundar-Cinemapettai.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top