லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் வங்கதேச அணி, 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிம் இக்பால், சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் லண்டனில் நடக்கும் ‘ஏ’ பிரிவு ஐந்தாவது லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற வென்ற வங்கதேச அணி கேப்டன் முஸ்ரபே மொர்த்ஷா, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதிகம் படித்தவை:  இத்தனை திருட்டு இணையதளத்தில் காலா படத்தை முடக்கியுள்ளர்களா.! ஷாக் ரிப்போர்ட்.!

ஆஸ்திரேலிய அணியில் ஜான் ஹேஸ்டிங்ஸ்க்கு பதிலாக, ஆடம் ஜம்பா அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல,வங்கதேச அணியில் மெஹாதி ஹாசன் இடம் பிடித்தார்.

தமிம் அபாரம்:
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு, தமிம், சவுமியா ஜோடி துவக்கம் அளித்தது. சவுமியா (3) ஹசில்வுட் வேகத்தில் வெளியேறினார். தொடர்ந்து வந்த காயிஸ் (6), முஷ்பிகுர் (9) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

ஷாகிப் ஏமாற்றம்:
பின் வந்த ஷாகிப் (29) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி தமிம் இக்பால் 95 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பின் வரிசை வீரர்களை ஸ்டார்க் கவனிக்க, வங்கதேச அணி, 44.3 ஓவரில் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார்.

அதிகம் படித்தவை:  அப்பா திரைவிமர்சனம் -Appa Movie Review

3
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 95 ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் தமிம், ஒருநாள் அரங்கில் மூன்றாவது முறையாக சதத்தை எட்டாமல் அவுட்டானார்.

4
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 95 ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் தமிம், கடைசியாக பங்கேற்ற 6 ஒருநாள் போட்டிகளில் 4 அரைசதம் அடித்து அசத்தினார்.

இதுவரலாறு
ஒருநாள் அரங்கில் இதுவரை ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் மோதியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2005ல் நடந்த போட்டியில் மட்டும் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.