Sports | விளையாட்டு
நீ யாராவேனாலும் இரு.. இதுல நாங்கதான் கெத்து.! இந்தியாவை தெரிக்கவிடும் ஆஸ்திரேலியா கேப்டன்.!
இந்திய அணி டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி T20 ஆகிய மூன்று போட்டிகளிலும் வலுவான அணியாக இருந்தாலும் டி20 போட்டியை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணி தான் வலுவாக இருக்கிறது அதனால் கண்டிப்பாக இந்த தொடரை வெல்வோம் என அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்,
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளது அங்கு 3 T20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளில் 4 டெஸ்ட் தொடர் போட்டிகளும் அவர்களுடன் மோதி இருக்கிறது இதில் முதலில் டி20 போட்டி தான் தொடங்குகிறது முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளார்கள், ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் பல தோல்விகளை சந்தித்து வருவது அனைவருக்கும் தெரியும்,
அதனால் ஆஸ்திரேலியா அணியில் மறுகட்டமைப்பில் ஈடுபட்டுள்ளது, ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது, அதேபோல் இந்திய அணியும் அனைத்து போட்டிகளிலும் மிரட்டலாக வெற்றி கண்டு வருவதால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மீண்டும் மாஸ் காட்டுவதற்காக ஆர்வத்தில் இருக்கிறது.
இன்று T20 போட்டி தொடங்க இருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார், அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தாலும் டி20 போட்டிகளில் நாங்கள் சிறந்த அணி என்று நிரூபித்துள்ளோம் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு தொடரில் வெற்றி கொண்டுள்ளோம், அதே போல் நீண்ட காலமாக இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது அவருடன் எங்கள் அணி முழு பலத்துடனும் ஆக்ரோஷத்துடனும் சிறப்பாக ஆடும் அதனால் இந்திய அணிக்கு எங்களை எளிதில் வீழ்த்த முடியாது என அந்த அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.
