Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

அதிர்ஷ்டத்தை துரதிர்ஷ்டமாக மாற்றிய இந்திய வீரர்.. கேப்டன் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. துவக்க வீரர் ப்ரித்வி ஷா இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 17 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் புஜாரா மற்றும் விராட்கோலி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு ஓவருக்கு 2 ரன்கள் வீதமே இருந்தது ரன் ரேட். ஆஸ்திரேலிய பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க திணறினர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி விக்கெட்டை கிட்டத்தட்ட கைப்பற்றியும், கோட்டை விட்டது ஆஸ்திரேலிய அணி. 35வது ஓவரின் முதல் பந்தில் நாதன் லியான் பந்து வீச்சில் கோலி லெக் திசையில் சென்ற பந்தை அடிக்க முயன்று தவறவிட்டார். பந்தை ஆஸ்திரேலிய அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம்ப் பெயின் கேட்ச் பிடித்தார்.

நடுவர் அவுட் தர மறுத்துவிட்டாலும், டிம்ப் பெயின் டிஆர்எஸ் விதியை நாடவில்லை. பின் ரீப்ளேயில் பந்து விராட் கோலியின் கையுறையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது தெளிவாக தெரிந்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி விக்கெட்டை கிட்டத்தட்ட கைப்பற்றியும், கோட்டை விட்டது ஆஸ்திரேலிய அணி.

பின் கோலி 74 ரன்கள் எடுத்து ஆடி வந்த நிலையில் ரகானே ஒரு ரன் எடுப்பதற்கு விராத் கோலியை அழைத்து எளிதாக ஆஸ்திரேலியாவிடம் கோலி விக்கெட்டை ரன் அவுட் மூலம் பறி கொடுக்கச் செய்தார். விராத் கோலியின் விக்கெட்டை எடுத்த பின்னர் தான் கேப்டன் டிம்ப் பெயின் பெருமூச்சு விட்டார்.

Virat-Kholi-Cinemapettai.jpg

Virat-Kholi-Cinemapettai.jpg

Continue Reading
To Top