சாம்பியன் டிராபியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதில் போட்டியை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியும், ஐசிசி., யின் முழுநேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்தியா,  ஆஸ்திரேலியா,  தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 7 அணிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.

அதிகம் படித்தவை:  தோனியை மீண்டும் அசிங்கப்படுத்திய புனே உரிமையாளர்! செருப்படி கொடுத்த ரசிகர்கள்

சாம்பியன் தொடருக்கான அணியை முதல் ஆளாக தென் ஆப்ரிக்க அணி நேற்று அறிவித்திருந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலிய அணியின்  முன்னணி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் ஷேன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜார்ஜ் பெய்லி போன்றோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. தினேஷ் கார்த்திக் பாராட்டும் படம் எது தெரியுமா ?

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான 15 வீரர்கள் பட்டியல் வெளியீடு;

ஸ்டீவ் ஸ்மித், வார்னர், ஆரோன் பின்ச், கிளன் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், கிறிஸ் லின், ஹென்றிக்ஸ், பேட் கம்மின்ஸ், ஹாஸ்டிங்க்ஸ், ஹசில்வுட், டிராவிஸ் ஹைட், பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.