Connect with us

Cinemapettai

srilanka

Sports | விளையாட்டு

ரன் அவுட்டில் புதிய முறையை அறிமுகப்படுத்திய இலங்கை அணி வீரர்.. சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள்

கிரிக்கெட் வரலாற்றில் ரன் அவுட் செய்வதில் புதிய முறையை இலங்கை அணி வீரர் சண்டகன், நேற்று நடந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டியில் செய்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில் நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதிலும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு சுவாரஸ்யமான காட்சி அந்த போட்டியில் அரங்கேறி உள்ளது. 13வது ஓவரை வீசிய சண்டகண் இரண்டாவது பந்தை வார்னர் நேராக எதிர்முனையில் இருந்த ஸ்டம்பை நோக்கி அடித்தார். மறுமுனையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் அதனை கவனிக்காமல் ரன் எடுக்க ஓடினார். ஆனால் சண்டை தான் அந்த பந்தை கையில் எடுத்து நேராக ஸ்டம்புக்கு வீசாமல் பந்தை ஒரு கையிலும் மறு கையிலும் ஸ்டம்பை எடுத்தார்.

கிரிக்கெட் விதியின் படி பந்து உள்ள கையினாலேயே ஸ்டம்பை எடுக்க வேண்டும். ஆனால் அவர் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக பண்ணியது அரங்கில் இருந்த அனைவரையும் சிரிப்பு உள்ளாக்கியது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் அப்செட்டில் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top