ஹாலிவுட் பிரியர்களுக்கு செம வேட்டை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 6 படங்கள்

This week OTT Release Movies : இந்த வாரம் தமிழ் ரசிகர்களை ஓடிடி நிறுவனங்கள் கைவிட்டாலும் ஹாலிவுட் பிரியர்களுக்கு செம வேட்டையாக சில படங்கள் வெளியாகிறது. அதாவது கடந்த வாரம் தனுஷின் ராயன், பிரபாஸின் கல்கி ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த வாரம் தமிழில் எந்த படமும் ஓடிடியில் வெளியாகவில்லை. அதோடு பாப்கானுக்கும் செலவில்லை என்பது போல தியேட்டரிலும் பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. கடந்த வாரம் வெளியான கொட்டுகாளி மற்றும் வாழை படங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

மற்ற மொழிகளில் வெளியாகும் ஆறு படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். ஐசி 814 கந்தகர் ஹிஜாக் என்ற வெப் தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 29 வெளியாகிறது. இப்படம் இந்தியா ஏர்லைன்ஸ் விமானத்தில் கடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆறு எபிசோடுகளாக எடுக்கப்பட்டிருக்கிறது.

தியேட்டரில் வரவேற்பை பெற்ற கொட்டுகாளி மற்றும் வாழை

அடுத்ததாக காமெடி கலந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது அபிகாயி. இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியான நிலையில் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் காட்ஸில்லா எக்ஸ் காங் தி நியூ எம்பயர் படம் ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

நகைச்சுவை கலந்த படமாக எடுக்கப்பட்ட இந்த படம் ஜியோ சினிமாவில் ஆகஸ்ட் 29 வெளியாகிறது. அதேபோல் ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் அதிகாரியாக இருக்கும் பல்லவியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படி படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் தி ரிங்க்ஸ் ஆஃப் படம் பிரைம் வீடியோவில் வருகின்ற ஆகஸ்ட் 29 வெளியாகிறது.

ஓடிடியில் பட்டையை கிளப்பும் படங்கள்

Next Story

- Advertisement -