சமுத்திரக்கனி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘தொண்டன்’. இப்படத்தில் விக்ராந்த், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்டன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், தொண்டன் படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளித்துள்ளது. இப்படம் வருகிற மே 26-ஆம் தேதி முதல்  உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்னதாக நாளை முதல் திரையரங்குகளில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை  தொடங்கவிருக்கிறது. தமிழகம் முழுவதும் இப்படம் சுமார் 300 திரையரங்குகளுக்கும் மேலாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.