சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிப்பவர் வருண்மணியன் (35). தொழில் அதிபரான இவரது அலுவலகம் நந்தனத்தில் உள்ளது. பிரபல படத்தயாரிப்பாளரும், திரிஷாவின் முன்னாள் காதலருமான வருண்மணியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் திரைப்படமான காவியத்தலைவன்,  வாயை மூடி பேசவும் போன்ற படங்களை தயாரித்தவர் வருண்மணியன். இவர் ரேடியன்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் பல கோடி ருபாய் சம்பாதித்து உள்ளார்.

படத்தயாரிப்பின்போது இவருக்கும் திரிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இருவரும் திருமணம் செய்யப்போவதாக, நிச்சயதார்ததம் நடைபெற்றது. ஆனால், திடீரென திரிஷா அவருடனான உறவை முறித்தார்.

Trisha Varun Break Off
Trisha Varun

இந்நிலையில், வருண்மணியன் நடிகை பிந்துமாதவியுடன் சுற்றினார். தற்போது, முன்னாள் திமுக அமைச்சரும்,  தினகரன் பத்திரிகை  நிர்வாகி கே.பி.கந்தசாமியின் பேத்தியான கனிகாவை காதலித்து வருகிறார். இவர் கே.பி.கே. குமரனின் மகள் ஆவார். இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் வருண் மணியனுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்ததாக கூறப்பட்டது. அதன் காரணமாக அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. தற்போது எந்த பிரச்சினை களும் இல்லை என்றதால் அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை அலுவலகம் முடிந்து லிப்ட் வழியாக வீட்டுக்கு திரும்பும்போது, அவருடன் வந்த இரண்டுபேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, ஸ்குரு ட்ரைவால் மற்றும் சில ஆயுதங்களால் லிப்டின் உள்ளேயே வருண் மணியனை கடுமையாக தாக்கி உள்ளனர்.

bindhu madhavi varunmanianஇதில் அவரது கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. 4-வது தளத்தில் லிஃப்ட் கதவு திறந்தபோது அலுவலக ஊழியர்கள் ஓடிவந்து, தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வருண்மணியன் மீதான தாக்குதலுக்கு படப்பிரச்சினை காரணமா அல்லது அவரது காதல்கள் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அவர்கள் சைதாப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார்(30), பாலமுருகன்(29) என்பது தெரியவந்தது.

த்ரிஷா இல்லனா பிந்து மாதவினு வாழ்ந்துட்டு வந்தவரை அவர் அலுவலகத்திலேயே வச்சி குத்திருகானுங்க.. இவளோ தைரியமா பண்ணிருகானுங்க அது மட்டும் இல்ல. போலீஸ் பாதுகாப்பு எப்போ போகும்னு வெயிட் பண்ணி பிளான் பண்ணி வச்சி அடிச்சிருகானுங்க. இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்ச வரூண் மணியன் ஏன் ஒரு பாதுகாவலாறை வச்சிகலன்னு ஒரு கேள்வி வருது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: தொழில் காரணமோ அல்லது காதல் காரணமோ.. நல்ல வச்சி செஞ்சிருக்காங்க.. ஸ்க்ரு டிரைவர், கத்திலாமா வச்சி அடிச்சிருகாங்கனா இது கொலை முயற்சியா அல்லது பயமுறுத்தவா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.