Reviews | விமர்சனங்கள்
உலக அரசியல் பேசும் உள்ளூர் சினிமா.. குண்டு திரைவிமர்சனம்
பா ரஞ்சித் தான் இயக்கும் படங்களில் மட்டுமல்ல தயாரிக்கும் படங்களிலும் மறைமுகமாக பல விஷயங்களை புகுத்துபவர். அவரின் நீலம் புரொடக்ஷன்ஸ் பரியேறும் பெருமாள் தொடர்ந்து தயாரித்துள்ள படமே “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. அதியன்ஆதிரை இயக்கத்தில் ரெடி ஆகியுள்ள படம்.
கதை – எவ்வாறு அணுஆயுத குண்டுகள் இந்தியா வந்தது என்பதுடன் துவங்குகிறது படம். மகாபலிபுரத்தில் ஒதுங்குகின்றது குண்டு. தான் லார்ரி ஓனர் ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் அட்டகத்தி தினேஷ். இவர் காதலிக்கும் உயர் ஜாதி டீச்சர் ட்ரைனிங் முடித்த பெண்ணாக ஆனந்தி. குண்டை மறைக்க நினைக்கும் போலீஸ். அந்த குண்டு பற்றிய உன்மையை வெளியிட துடிக்கும் ரித்விகா என பல கதாபாத்திரங்கள்.
பீச் டு போலீஸ் ஸ்டேஷன் டு இரும்பு கடை டு பாக்டரி என குண்டுடன் அழகிய பயணமாக செல்கிறது படம். குண்டு வெடித்ததா அல்லது அதனை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினாரா தினேஷ் என்பது மீதி கதை.
சினிமாபேட்டை அலசல் – படத்தில் உலகலெவெல் கார்ப்ரேட் அரசியலும் உள்ளது. நமது உள்ளூர் ஜாதி அரசியலும் உள்ளது. எனினும் டாகுமெண்டரி பார்த்த பீல் ஏற்படாமல் திரைக்கதையை நகர்த்திய இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டு.
கிளாப்ஸ் – தென்மாவின் இசை, கிஷோரின் ஒளிப்பதிவு, செல்வாவின் எடிட்டிங், தினேஷின் நடிப்பு, முனிஸ்காந்தின் காமெடி, கதாபாத்திரங்களின் தேர்வு, கிளைமாக்சில் சொல்லப்பட்ட உலக அமைதி கருத்து ..
சினிமாபேட்டை வெர்டிக்ட் – ஜனரஞ்சக அம்சம் நிறைந்த தரமான பொழுது போக்கு படமே இது.
குண்டு – குட்டு
சினிமாபேட்டை ரேட்டிங் 3.25 / 5
