தினேஷ் ரவி என்பது, இவருடைய பெயராக இருந்தாலும், அட்டகத்தி தினேஷ் என்பது தான் நமக்கு தெரிந்த பெயர். நம்ம நார்த் மெட்ராஸில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் ஈ, ஆடுகளம், மௌன குரு போன்ற படங்களில் துண்டுத் துக்கடா காதாபாத்திரத்தில் நடித்து வந்தவருக்கு, சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் அட்டகத்தி. அதன் பின்பு குக்கூ, விசாரணை, ஒரு நாள் கூத்து, கபாலி என்று ஒரு கலக்கு கலக்கியவர். நல்ல கதை அம்சம் மற்றும் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படங்களாக தேர்ந்துடுத்து நடிப்பது இவரது ஸ்பெஷாலிட்டி ஆகிவிட்டது.

நேற்று வெளியான தினேஷின் புதுப்படத்தின் முதல் லுக் போஸ்டர் தான் இப்போ ட்ரெண்டிங் ஆகிவருகிறது. வெற்றி மாறன் தயாரிப்பில், பாக்ஸ் ஸ்டார் வெளியீட்டில் புது முக இயக்குனர் ராஜ்குமார்(வெற்றிமாறனின் அசிஸ்டன்ட்) எடுக்கும் படம் தான் “அண்ணனுக்கு ஜே!”. பனை மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணரவை, இப்படத்தில்  மெசேஜாக வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலையில் தொடங்கியது.

படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுதே இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பது புரிகிறது. அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற  ஆர்வம் உள்ளவராக தினேஷ், அவர் தந்தையாக மயில்சாமி, படத்தின் ஹீரோயினாக மஹிமா நம்பியார் நடிக்கின்றனர். இப்படத்தில் ராதா ரவி, மற்றும் ஆர். ஜே. பாலாஜியும் நடித்துள்ளனர். துப்பறிவாளன் புகழ் அராலி கொரெலி இப்படத்திற்கு இசை அமைக்கிறார், ஒளிப்பதிவாளராக விஷ்ணு ரெங்கசாமியும், எடிட்டராக வெங்கடேஷும் பணிபுரிகின்றனர்.

முதல் லுக் போஸ்டர்-

குரங்கில் இருந்து மனிதன் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தான், என்பதை போஸ்டராக நாம் பார்த்திருப்போம், அதை மையகப்படுத்தி, ஒரு மனிதன் அரசியலில் தலைமை நிலை அடைய அவன் கடந்து வந்த பாதையை உணர்த்திவது போல இருந்தது முதல் லுக் போஸ்டர்.

செகண்ட் லுக் போஸ்டர்-

தற்போழுது தமிழகத்தில், உள்ள அரசியல் சூழ்நிலையை கிண்டல் செய்யும் விதமாக உள்ளது இந்த போஸ்டர். நிறைய புத்தகங்களின் மத்தியில் அமர்ந்துக் கொண்டு ” 30 நாட்களில் முதல் அமைச்சர் ஆவது எப்படி?”  என்ற புத்தகத்தை படிப்பது போல் உள்ளது.

சினிமாபேட்டை த்ரோபேக்- இந்தப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கடந்த 2014 ஆம் வருடமே துவங்குவதாக இருந்தது. எனினும் பணப் பிரச்சனை காரணமாக கை விடப்பட்டது. இ இப்பொழுது  வெற்றிமாறன் அவர்கள், பாக்ஸ் ஸ்டார் உதவியுடன் தன க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலமாக தயாரித்துள்ளார்.