fbpx
Connect with us

Cinemapettai

விமல் + ரஜினிகாந்த் = அட்டகத்தி தினேஷ் !!

News | செய்திகள்

விமல் + ரஜினிகாந்த் = அட்டகத்தி தினேஷ் !!

இந்த ஆர்டிகிள் நடிப்பு சம்பந்தப்பட்டது இல்லை. அட்டகத்தி தினேஷின் புதுப்படமான “களவாணி மாப்பிள்ளை” டைட்டில் பற்றியது.

ராஜபுஷ்பா பிக்சர்ஸ்

ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியாக சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவுக்கு பின் இப்பட நிறுவனத்தின் பாணரில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

தந்தை வழியில் மகன்

மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் தயாரித்து, படம்  இயக்குகிறார். இந்த படத்திற்கு  விமல் (களவாணி)  மற்றும் ரஜினி (மாப்பிள்ளை)  நடித்த படங்களின் டைட்டில்களை இணைத்து ‘களவாணி மாப்பிள்ளை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர். இப்படத்திற்கு ரகுநந்தன் இசை அமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

அப்பாவை பின்பற்றி தயாரிப்பு மற்றும்  இயக்கம் என்று களமிறங்கும் காந்தி மணிவாசகம், கதை அமைப்பிலும் ஆக்ஷன், காமெடி, காதல், செண்டிமெண்ட், கமர்ஷியல் என்று அப்பா பார்முலாவையே கையில் எடுப்பார் என்று தான் தோன்றுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top