தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பாவனாவை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாவனா தற்போது ஜீன்போல்லால் இயக்கும் ‘ஹனிபி–2’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளா மாநிலம் திருச்சூரில் நடந்து வருகிறது.

கடந்த 17–ந்தேதியன்று அவர், படப்பிடிப்பை முடித்து விட்டு இரவு 8 மணிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்த சொகுசு காரில் கொச்சிக்கு திரும்பியபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மார்ட்டின் என்பவர் காரை ஓட்டினார். நெடும்பச்சேரி அருகில் உள்ள அதானி என்ற இடத்தில் கார் சென்ற போது பின்னால் வந்துகொண்டு இருந்த வேன் ஒன்று பாவனா கார்மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
இதனால் டிரைவர் காரை நிறுத்தினார். அப்போது வேனில் இருந்து இறங்கிய 5 பேர் பாவனாவின் காருக்குள் அத்துமீறி நுழைந்து, டிரைவரை மிரட்டி இருக்கை மாற்றி உட்கார வைத்து காரை ஓட்டிச்சென்றனர். சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி டிரைவர் மார்ட்டினை கீழே இறக்கி பின்னால் வந்த வேனில் ஏற்றினர். பிறகு காரை வெவ்வேறு இடங்களுக்கு தாறுமாறாக ஓட்டிச்சென்றனர். ஓடும் காரிலேயே பாவனாவை அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர்.

2 மணிநேரம் காமுகர்களிடம் சிக்கி பாவனா தவித்தார். பாலியல் தொல்லை கொடுத்ததை அவர்கள் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். நெருக்கமாக இருப்பதுபோன்று புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். பின்னர் கார் பலாரி வட்டம் என்ற இடத்தை நெருங்கியபோது கீழே இறங்கி பின்னால் வந்த வேனில் இருந்த மார்ட்டினை இறக்கி விட்டு அதே வேனில் அந்த ஆசாமிகள் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் பட உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில், போலீசார் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

பாவனாவுக்கு காளமேச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது.

பாவனாவிடம் காளமேச்சேரி பெண் மாஜிஸ்திரேட்டு ரகசிய வாக்குமூலம் பதிவு செய்தார். இந்த வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில், நடிகை பாவனாவின் காரை ஓட்டி வந்த டிரைவர் மார்ட்டினுக்கும், காருக்குள் ஏறிய மர்ம ஆசாமிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்ததால் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மார்ட்டினின் டெலிபோன் அழைப்பு எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. காரில் ஏறியவர்களில் ஒருவர் பாவனாவின் முன்னாள் டிரைவர் சுனில்குமார் என்று தெரியவந்துள்ளது. இவர் மீது போலீசில் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மார்ட்டினுக்கு சுனில்குமார்தான் பாவனாவிடம் சிபாரிசு செய்து டிரைவர் வேலை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள். குற்றவாளிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகர்–நடிகைகள் பலர் சமூக வலைத்தளங்களில் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குற்றவாளிகளில் மேலும் 3 பேர் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டனர். டநடிகையின் கார் டிரைவர் மார்ட்டின் அந்தோணி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.ஆலப்புழாவை சேர்ந்த வடிவாள் சலீம், கண்ணூரை சேர்ந்த பிரதீப் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த கும்பல் இதற்காக ஒரு மாதம் திட்டம் தீட்டி உள்ளனர். பாவனாவை ஆபாசமாக பட்ம் எடுத்து அவரைடம் பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த கும்பலின் தலைவன் பல்சர் சுனி நண்பர் ஒருவர் விசாரணையில் கூறும் போது நடிகையை பாலியல் துன்புறுத்தி எடுக்கபட்ட வீடியோவை காட்டி மிரட்டி ரூ 30 லட்சம் பறிக்க திட்டமிட்டு இருந்ததாக கூறி உள்ளார்.